முகப்பு
உலகம்

நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு

நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவு மேலும் 12 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 14 ஏப்ரல், 2020 at 6:30 PM
பகிர்:

நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவு மேலும் 12 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பான அமைச்சரவைக் கூட்டம் அந்நாட்டின் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 27ஆம் தேதி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. முன்னதாக நேபாளத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு நாளையுடன் முடிவடைகிறது. 

இந்த நிலையில் அந்நாட்டில் ஊரடங்கு உத்தரவு மேலும் 12 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.  அதேசமயம் நேபாளத்தில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை அனைத்துவித வெளிநாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

Advertisement

நேபாளத்தில் இந்த வைரஸுக்கு இதுவரை 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  சீனாவின் வுகான் நகரில் உருவான கரோனா வைரஸுக்கு இதுவரை உலக அளவில் 19 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இதையடுத்து கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக பல நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.