கரோனா பரவினாலும் ஏப்ரல் 27-ல் ஊரடங்கு தளர்வு: இலங்கை காவல்துறை
இலங்கையில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 400 ஆக இருக்கும் நிலையில், எப்ரல் 27ம் தேதி நாடு முழுவதும் பிரப்பிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு தளர்த்தப்படும் என்று இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.
கொழும்பு: இலங்கையில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 400 ஆக இருக்கும் நிலையில், எப்ரல் 27ம் தேதி நாடு முழுவதும் பிரப்பிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு தளர்த்தப்படும் என்று இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் இலங்கையில் அதிகபட்சமாக 49 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், இலங்கையின் கடற்படையில் மட்டும் 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, இலங்கையில் 417 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், 7 பேர் மரணம் அடைந்துள்ளனர். 190 பேர் குணமடைந்துவிட்டனர்.
இந்த நிலையில், இலங்கை காவல்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இலங்கையில் ஏப்ரல் 27ம் தேதி திங்கட்கிழமை காலை 5 மணி முதல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் இந்த ஊரடங்கு பிறப்பிக்கப்படுவது குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.
கரோனா தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்த இலங்கையில் மார்ச் 20ம் தேதி முதல் 24 மணி நேர முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது.