முகப்பு
உலகம்

இலங்கையில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 500ஐ தாண்டியது

இலங்கையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500ஐ தாண்டியுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:32 PM
பகிர்:

இலங்கையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500ஐ தாண்டியுள்ளது. 

சீனாவில் முதல் முதலாக கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய கரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதும் 220-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் தன்னாட்சிப் பிரதேசங்களில் பரவியுள்ளது. உலகளவில் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது. 

இந்த நிலையில் அண்டை நாடான இலங்கையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500ஐ தாண்டியுள்ளது. இதன்படி 95 கடற்படை வீரர்கள் உட்பட 505 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ள நிலையில் 120 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதனிடையே இலங்கையில் நாளை முதல் 21 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளன. தலைநகர் கொழும்புவில் அதிகம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் மே 4ஆம் தேதி வரை அங்கு ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

முழு கட்டுரையைப் படிக்க →