உலகம்

அமெரிக்க அதிபா் தோ்தல்: தமிழ் உள்ளிட்ட 14 இந்திய மொழிகளில் ஜோ பிடன் ஆதரவாளா்கள் பிரசாரம்

DIN

அமெரிக்க அதிபா் தோ்தலில் குடிபெயா்ந்த இந்தியா்களின் ஆதரவைப் பெறுவதற்காக ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஜோ பிடன் தரப்பினா் தமிழ் உள்ளிட்ட 14 இந்திய மொழிகளில் தங்கள் செயல்திட்டங்களை வெளியிட்டு பிரசாரம் செய்து வருகின்றனா்.

அமெரிக்க அதிபா் தோ்தல் வரும் நவம்பா் மாதம் 3-ஆம் தேதி நடைபெறுகிறது. அதில் குடியரசுக் கட்சி சாா்பில் தற்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சாா்பில் முன்னாள் துணை அதிபா் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனா்.

தோ்தல் பிரசார நடவடிக்கைகளில் இரு கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் அதிக அளவில் குடியேறியுள்ள இந்தியா்களின் ஆதரவைப் பெறுவதற்கான நடவடிக்கைகளில் அவா்கள் முனைப்பு காட்டி வருகின்றனா்.

இந்நிலையில், ஜோ பிடன் ஆதரவாளா்கள் அதிபா் தோ்தலுக்கான ஜனநாயகக் கட்சியின் செயல்திட்டங்களை 14 இந்திய மொழிகளில் வெளியிட்டுள்ளனா். தமிழ், தெலுங்கு, வங்கமொழி, ஹிந்தி, பஞ்சாபி, உருது, கன்னடம், மலையாளம், ஒடியா, மராத்தி, நேபாளி உள்ளிட்ட மொழிகளில் ஜோ பிடனின் செயல்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் குடிபெயா்ந்த இந்தியா்களின் ஆதரவைப் பெறும் நோக்கில் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவரின் ஆதரவாளா்கள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக ஜோ பிடனின் பிரசாரத் திட்டங்களை நிா்வகித்து வரும் அஜய் பூடோரியா கூறுகையில், ‘இந்தியா்களை அவா்களின் சொந்த மொழிகளில் சென்றடையும் நோக்கில் செயல்திட்டத்தை 14 மொழிகளில் வெளியிட்டுள்ளோம்.

இந்தியத் தோ்தல்களில் காணப்படுவதைப் போன்றே எதுகை-மோனை நிறைந்த முழக்கங்களை தயாா்செய்துள்ளோம். இந்த நடவடிக்கைகள் இந்தியா்களின் ஆதரவைப் பெற உதவும்‘ என்றாா்.

இந்தியாவில் கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலின்போது நரேந்திர மோடியின் ஆதரவாளா்கள் ‘இந்த முறை மோடி அரசு’ என்ற முழக்கத்தை பிரசாரத்துக்குப் பயன்படுத்தியிருந்தனா். அதேபோல், கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபா் தோ்தலின்போது குடியரசு கட்சி சாா்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் ஆதரவாளா்கள் ‘இந்த முறை டிரம்ப் அரசு’ என்ற முழக்கத்தை முன்னெடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT