பேரிடர்களை அறிவியல் பூர்வமாக அணுகும் சீனா!
சீனா என்றதுமே முன்பெல்லாம் பலருக்கும் பொம்மை, செல்போன், விடியோ கேம்ஸ் என பல விசயங்கள் நினைவுக்கு வந்திருக்கும்..
சீனா என்றதுமே முன்பெல்லாம் பலருக்கும் பொம்மை, செல்போன், விடியோ கேம்ஸ் என பல விசயங்கள் நினைவுக்கு வந்திருக்கும் ஆனால் இப்போது ஒட்டு மொத்த உலகிற்கும் சீனாவின் பெயரைச் சொன்னாலே கரோனாதான் நினைவுக்கு வருகிறது.
வர்த்தக உலகத்தில் மலிவான பொருட்கள் பல்வற்றை தயாரித்து உலகிற்கு வழங்கிய சீனாவின் தயாரிப்பாகவே கரோனாவும் பார்க்கப்படுகிறது. உண்மையில் அது நிரூபிக்கப்பட்டாத குற்றச்சாட்டுதான். இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் செவிமடுக்காமல் கரோனாவை மிக சாதுரியமாக கட்டுப்படுத்திய சீனா தற்போது எதிர்நோக்கி உள்ள மற்றொரு பிரச்சனை. மூன்று கோர்ஜஸ் அணை.
சீன ஜனநாயக சீர்திருத்தத்தின் முன்னோடியான சன் யாட்-சென் முதல் ஒவ்வொரு சீனத் தலைவரும், யாங்சியில் ஒரு பெரிய அணையைக் கட்ட வேண்டும் என்று கனவு கண்டனர், 1919 ஆம் ஆண்டில் சீனக் குடியரசை மேம்படுத்துவதற்கும் முழு நாட்டிற்கும் நீர் மின்சக்தியை வழங்குவதற்கும் மூன்று கோர்ஜ்களை அணையை கட்ட சென் திட்டம் வகுத்தார். சீனாவின் வரலாற்று கனவாக இருந்த மூன்று ஜார்ஜ் அணை 2006 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டு அவ்வாண்டின் ஜூலை மாதத்தில் வினாடிக்கு 53,000 கன மீட்டரில் வெள்ளநீரைப் பெறத் தொடங்கியது, நீர் மட்டத்தை 149 மீட்டராக உயர்த்தியது. அதிகபட்ச நிலை 175 மீட்டர் ஆனது.
தற்போது உலகின் மிகப்பெரிய அணையாக விளங்கும் சீனாவின் த்ரீ கோர்ஜஸ் அணை வெள்ளத்தால் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதோடு மட்டுமலலமல் இந்த அணையைப் பற்றிய இன்னொரு தகவலும் பரவி வருகிறது. அதாவது ஒரே இடத்தில் மிக அதிகமான அளவு தண்ணீர் தேங்குவதால் பூமியின் வேகம் 0.06 மில்லி செகண்ட் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. உண்மையில் என்னதான் நடக்கிறது சீனாவில்.. கரோனா எப்படி கட்டுப்படுத்தப்பட்டது, பூமியின் சுழற்சி வேகத்தை சீனா கட்டுப்படுத்துமா இந்த உலகின் பெரிய அணை, வெள்ளத்தை எதிர் கொள்ள சீனா என்ன செய்கிறது போன்ற பல கேள்விகள் இப்போது பலருக்கும் எழுந்துள்ளது. இந்த கேள்விகளுக்கு எல்லாம் அவரவர்களுக்கு தெரிந்த தகவல்களை வைத்து பதில்களை பரப்பி வருகிறார்கள்.
இதுபற்றி சீனாவைச் சேர்ந்த ஒருவர் கூறும் போது நீர் தேக்கங்கள் சீனாவில் மட்டும் இல்லை. உலகிலேயே இது பெரிய அனையாக இருந்தாலும். இதுபோன்ற அணைகள் உலகம் முழுவதும் நிறைய இருக்கின்றன. எதிர்பாராமல் ஒரு பேரிடர் வந்த போது சீனா அதை அறிவல் பூர்வமாக ஆராய்ந்து பேரிடரில் இருந்து மீண்டு வருவதற்கான விதிமுறைகளை வகுத்து ஒட்டு மொத்த நாட்டு மக்களையும் அந்த விதிகளை பின்பற்ற செய்ததே சீனாவின் வெற்றிக்கான ரகசியம். அமெரிக்கா போன்ற நாடுகள் ஜனநாயகம் என்ற பெயரில் அறிவியல் பூர்வமாக எதையும் யோசிக்காமல் செயல்படுவதால்தான் பேரிடரை சமாளிப்பதில் திணறி வருகிறது.
சீனா வெள்ளப் பெருக்கு மட்டும் அல்ல எந்த ஒரு இயற்கை பேரிடம் வந்தாலும் அறிவியல் பூர்வமாக யோசித்து, தொழிநுட்ப உதவிகளுடன் மக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருவதால் எதையும் எளிதில் சமாளிக்க முடிகிறது என்று கூறினார்.
1998ம் ஆண்டு ஏற்கனவே ஒரு மோசமான வெள்ள அபாயத்தை சீனா எதிர் கொண்டது. அவற்றை சமாளிப்பதற்கான சக்தியையும் முன் அனுபவத்தையும் சீனா பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம், மூன்று வெள்ளப் பெருக்கு கோர்ஜ் அணைகளைத் தாக்கின. ஜியாங்சி மாகாணத்தில் உள்ள போயாங் ஏரி, வரலாறு காணாத அளவில் மிக அதிகமான உயர்மட்டத்தை எட்டியது. இதையடுத்து ஜூன் மாதத்தின் பிற்பகுதியில் பல முறை அணைத் திறக்கப்பட்டது.
வெள்ளக் கட்டுப்பாடு, நீர்ப்பாசனம் மற்றும் அணைத்தேக்கம் ஆகியவற்றில் சீனர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீர்வழிகளைக் கையாண்டுள்ளனர். சீனாவின் ஏகாதிபத்திய ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை, ஆறுகளைப் பயன்படுத்துவதற்கான திறன் உயிர்களைக் காப்பாற்றியது மற்றும் செழிப்பைக் கொண்டுவந்தது மட்டுமல்லாமல், இயற்கை பேரழிவுகள் ஒரு அடையாளமாக எடுத்துக் கொள்ளப்பட்டதால், அவர்களின் நீர்வளங்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் நவீன காலங்களில், தொழில்நுட்பத்தின் வலிமையுடன் வளர்ந்துள்ளது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
தகவல்: சீன ஊடகக் குழுமம்