மெக்சிகோ: அதிகரிக்கும் கரோனா: 50 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்பு
மெக்சிகோவில் கடந்த 24 மணிநேரத்தில் 819 பேர் உயிரிழந்த நிலையில், அங்கு கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மொத்தமாக 50 ஆயிரத்தை கடந்தது.
மெக்சிகோ: மெக்சிகோவில் கடந்த 24 மணிநேரத்தில் 819 பேர் உயிரிழந்த நிலையில், அங்கு கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மொத்தமாக 50 ஆயிரத்தை கடந்தது.
இது தொடர்பாக மெக்சிகோ சுதாகாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கரோனா தொற்றுக்கு மெக்சிகோவில் 50,517 பேர் உயிரிழந்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 6,590 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 4,62,690-ஆக அதிகரித்துள்ளது.
மெக்சிகோவில் மிகக்குறைந்த அளவிலேயே பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதுவரை அப்பகுதிகளில் 10,50,000 பரிசோதனைகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. இது நூறு குடியிருப்புகளில் ஒருவருக்கும் குறைவாக பரிசோதனை செய்வதற்கு சமம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.