முகப்பு
உலகம்

சீனாவில் தேசிய உடற்தகுதி தினம்

2008ஆம் ஆண்டின் ஆகஸ்டு 8ஆம் நாள் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:05 PM
National Fitness Day in China
பகிர்:

2008ஆம் ஆண்டின் ஆகஸ்டு 8ஆம் நாள் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

அதற்குப் பிறகு, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 8ஆம் நாள் தேசிய உடற்தகுதி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. சிறந்த ஒருவர், செழுமையான அறிவுகளுடன் ஆரோக்கியமான எழுச்சி மற்றும் வலுவான உடலையும் கொண்டிருக்க வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு புதிய ரக கரோனா வைரஸ் பரவத் தொடங்கிய பிறகு, மக்களின் உயிர் பாதுகாப்பையும் உடல் நலத்தையும் முதல் இடத்தில் வைக்க வேண்டும் என்று அவர் தொடர்ந்து கூறி வருகின்றார். மக்களின் உடல் நலம், குறிப்பிட்ட வசதியான சமூகத்தைப் பன்முகங்களிலும் உருவாக்கத் துணை புரியும் என்று நம்பப்படுகிறது.

2022ஆம் ஆண்டில் குளிர்கால பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குப் பெய்ஜிங் முழுமையாக ஆயத்தம் செய்து வருகின்றது. இது, சர்வதேச ஒலிம்பிக் விளையாட்டு வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றும் என்று குறிப்பிடத்தக்கது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

முழு கட்டுரையைப் படிக்க →