முகப்பு
உலகம்

அமெரிக்க மற்றும் தைவான் அதிகாரிகள் சந்திப்பு: சீனா கடும் எதிர்ப்பு

அமெரிக்க சுகாதார மற்றும் பொதுச் சேவை அமைச்சர் அலெக்ஸ் அஸ்ஸா ஆகஸ்ட் 9ஆம் நாள் சீனாவின் தைவானுக்கு வருகை தந்து, தைவான் தலைவர்களைச் சந்தித்துப்பேசினார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
பகிர்:

அமெரிக்க சுகாதார மற்றும் பொதுச் சேவை அமைச்சர் அலெக்ஸ் அஸ்ஸா ஆகஸ்ட் 9ஆம் நாள் சீனாவின் தைவானுக்கு வருகை தந்து, தைவான் தலைவர்களைச் சந்தித்துப்பேசினார்.

சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான மூன்று கூட்டறிக்கையை இச்செயல் கடுமையாக மீறியுள்ளது. தவிரவும், ஒரே சீனா என்ற கோட்பாட்டுக்கும் புறம்பானது. இதற்குச் சீனா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

தேர்தல் நோக்கிற்காக, சில அமெரிக்க அரசியல்வாதிகள் சீனாவைக் கட்டுப்படுத்த, தைவான் பிரச்சினையை வேண்டுமென்றே பயன்படுத்த நினைப்பது அபாயத்தில் முடியக் கூடும்.

தகவல்: சீன ஊடகக் குழுமம் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.