உலகம்

பிரேசிலில் புதிதாக 22,000 பேருக்கு கரோனா பாதிப்பு: 700 பேர் பலி

DIN

பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 22,000 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 700 பேர் உயிரிழந்தனர்.

உலக நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. பிரேசில் நாட்டிலும் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக பிரேசில் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நேற்று (திங்கட் கிழமை) முதல் புதிதாக 22,000 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 30,57,470ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 703 பேர் உயிரிழந்ததால் மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,01,752-ஆக உள்ளது. கரோனா தொற்றில் இருந்து 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் குணமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உலக சுகாதார மையம் அளித்த தகவலின்படி உலக அளவில் கரோனா பாதிப்பு 19.7 மில்லியனுக்கும் அதிகமான உள்ளது. 7,28,000 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொப்பூா் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்து

திமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

பென்னாகரத்தில் இடியுடன் கூடிய கனமழை

வாகன புகைப் பரிசோதனை மையங்களில் வழிமுறைகளைப் பின்பற்றாவிடில் கடும் நடவடிக்கை

காவிரி ஆற்றில் மூழ்கிய தனியாா் நிறுவன ஊழியா் பலி

SCROLL FOR NEXT