முகப்பு
உலகம்

சீனாவில் உயர் வேக இருப்புப்பாதை வளர்ச்சித் திட்டம்

சீனத் தேசிய இருப்புப்பாதை குழுமம், சீன இருப்புப்பாதை வளர்ச்சி பற்றிய திட்டம் ஒன்றை அண்மையில் வெளியிட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:07 PM
பகிர்:

சீனத் தேசிய இருப்புப்பாதை குழுமம், சீன இருப்புப்பாதை வளர்ச்சி பற்றிய திட்டம் ஒன்றை அண்மையில் வெளியிட்டது.

இத்திட்டத்தின்படி, 2035ஆம் ஆண்டில் சீனாவில் இருப்புப்பாதையின் மொத்த நீளம், 2 இலட்சம் கிலோமீட்டரை எட்டும். இதில் உயர் வேக இருப்புப்பாதையின் நீளம் சுமார் 70 ஆயிரம் கிலோமீட்டரை எட்டும். சீனாவில் 5 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையுடைய நகரங்கள் உயர் வேக இருப்புப்பாதை வலைப்பின்னலில் சேர்க்கப்படும்.

2050ஆம் ஆண்டில் மேலும் முன்னேறிய நவீன இருப்புப்பாதை வல்லரசின் ஆக்கப்பணிக்கான  இலக்கை சீனா பன்முகங்களிலும் நனவாக்கும்.

தொடர்புடைய புள்ளி விபரங்களின்படி, இவ்வாண்டின் ஜூலைத் திங்கள் இறுதி வரை, சீனாவில் போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ள இருப்புப்பாதையின் மொத்த நீளம் சுமார் ஒரு இலட்சத்து 41 ஆயிரத்து 400 கிலோமீட்டர் ஆகும்.

இது, உலகளவில் இரண்டாவது இடத்தை வகிக்கிறது. போக்குவரத்துக்கு திறந்து வைக்கப்பட்டுள்ள உயர் வேக இருப்புப்பாதையின் நீளம், 36 ஆயிரம் கிலோமீட்டர் ஆகும். இது உலகளவில் முதலிடத்தை  வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தகவல்:சீன ஊடக குழுமம்

முழு கட்டுரையைப் படிக்க →