அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் பரவும் காட்டுத் தீ 
உலகம்

லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத்தீ: 5,000 மடங்கு அதிகரித்துள்ளது

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் பகுதியில் பரவி வரும் காட்டுத்தீ 5,000 மடங்கு அதிகரித்துள்ளது. ஏற்கனவே 10,500 ஏக்கர் அளவிலான காட்டுப்பகுதி தீயால் முழுவதும் எரிந்து சேதம் அடைந்துள்ளது.

DIN

லாஸ் ஏஞ்சலீஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் பரவி வரும் காட்டுத்தீ 5,000 மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே 10,500 ஏக்கர் அளவிலான காட்டுப்பகுதி தீயால் முழுவதும் எரிந்து சேதம் அடைந்துள்ளது.

வடக்கு லாஸ் ஏஞ்சலீஸ் பகுதியில் உள்ள தேசிய வனப்பகுதியில் கடந்த புதன் கிழமை காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் 2 மணிநேரத்தில் 10,000 ஏக்கர் அளவில் காட்டுத்தீ பரவியது.

லாஸ் ஏஞ்சலீஸ் பகுதியை சேர்ந்த 1,000 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காற்று வீச்சு இல்லாமலே காட்டுத்தீ வேகமாக பரவி வருவதாகவும்,  இதனால் தீயை அணைக்கும் பணியில் தொய்வு ஏற்படுவதாகவும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே ஆயிரம் மடங்காக இருந்த காட்டுத்தீ தற்போது 5 ஆயிரம் கடங்காக அதிகரித்துள்ளதாகவும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT