உலகம்

தென்கொரியாவில் மார்ச் மாதத்திற்கு பிறகு ஒரே நாளில் அதிக அளவில் கரோனா பாதிப்பு

DIN

தென்கொரியாவில் கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு ஒரே நாளில் அதிக அளவிலான கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தென்கொரியாவிலும் கரோனா பரவல் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 279 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு ஒரே நாளில் அதிக அளவிலான கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளதால் தலைநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தென்கொரியா கரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு 15,318-ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 305 பேர் உயிரிழந்தனர். 

கடந்த மார்ச் மாதம் ஒரே நாளில் 367 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதற்கு பிறகு இன்று (ஞாயிற்றுக் கிழமை) நிலவரப்படி ஒரே நாளில் அதிக அளவிலான கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 

நாட்டின் தெற்கு பகுதிகளில் அதிக அளவிலான கரோனா பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. அங்கு நாள்தோறும் நூற்றுக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்படுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

SCROLL FOR NEXT