முகப்பு
உலகம்

அதிபர் டிரம்ப்பின் சகோதரர் உடல்நலக் குறைவால் மரணம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சகோதரர் ராபர்ட் டிரம்ப் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (சனிக்கிழமை) இரவு உயிரிழந்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:08 PM
அமெரிக்க அதிபர்
பகிர்:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சகோதரர் ராபர்ட் டிரம்ப் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (சனிக்கிழமை) இரவு உயிரிழந்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரப்பின் இளைய சகோதரரும், ரியல் எஸ்டேட் அதிபருமான ராபர்ட் டிரம்ப் 1948-ஆம் ஆண்டு பிறந்தார். 71 வயதான அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

நியூயார்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை அதிபர் டிரம்ப் கடந்த வெள்ளிக் கிழமை நேரில் சென்று சந்தித்தார். அப்போது அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாகவும் அதிபர் டிரம்ப் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

தொழிலதிபராகவும், டிரப்பின் நிறுவனங்களையும் நிர்வகித்து வந்த ராபர்ட், 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தொழிலதிபர் தேர்தலில் டிரப்பிற்கு உதவிபுரிந்தார்.

இதனிடையே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று (சனிக்கிழமை) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, எனது சகோதரர் உயிரிழந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் எனது சகோதராக மட்டுமல்லாமல், நண்பராகவும் இருந்தார். அவர் இல்லாதது எனக்கு பேரிழப்பு. மீண்டும் அவரை சந்திப்பேன் என நம்புகிறேன். அவரது நினைவுகள் என்றும் எனது நினைவில் இருக்கும். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டும் இவ்வாறு அதிபர் டிரம்ப் பதிவிட்டுள்ளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.