மருத்துவமனையில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காகவே அவர் சென்றிருப்பதாக ஜப்பான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
டோக்யோ: ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காகவே அவர் சென்றிருப்பதாக ஜப்பான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், கடந்த சில மாதங்களாக ஷின்சோ அபேவின் உடல்நிலை குறித்து வெளியாகும் தகவல்களால், அவரது உடல்நிலைப் பற்றிய சந்தேகங்கள் அதிகரித்துள்ளன.
கியோ பல்கலைக்கழக மருத்துவமனைக்கு ஷின்சோ அபே காரில் செல்லும் விடியோ ஜப்பான் தொலைக்காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பாகின.
சமீபத்தில் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அந்நாட்டு அமைச்சர் அகிரா அமாரி, இந்த சமயத்தில் பணியில் இருந்து விடுமுறை எடுப்பதை குற்றமாக அபே கருதுகிறார். ஆனால், அவருக்கு ஓய்வு தேவை என்று குறிப்பிட்டிருந்தார்.
அதே சமயம், ஆண்டுக்கு இரண்டு முறை அபே மேற்கொள்ளும் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காகவே அவர் மருத்துவமனை சென்றிருப்பதாகவும் அந்நாட்டு செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
65 வயதாகும் அபே, இதற்கு முன்பும் 2007-ஆம் ஆண்டு உடல்நிலையைக் காரணம் காட்டி பிரதமர் பதவியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.