கரோனா: ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் 22 கோடி இளைஞர்கள் வேலையிழப்பு 
உலகம்

கரோனா: ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் 22 கோடி இளைஞர்கள் வேலையிழப்பு

கரோனா பெருந்தொற்றால் 22 கோடி இளைஞர்கள் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் வேலையிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

DIN

கரோனா பெருந்தொற்றால் 22 கோடி இளைஞர்கள் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் வேலையிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இதன் மூலம் பொருளாதார சரிவு ஏற்பட்டு பல்வேறு தரப்பினர் வேலையிழந்துள்ளனர்.

இதனிடையே 'ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் கோவிட் -19 இளைஞர் வேலைவாய்ப்பு நெருக்கடியை சமாளித்தல்' என்ற தலைப்பின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கி சார்பில் ஆய்வு  நடத்தப்பட்டது. இதில் கரோனா தொற்றால் தொழிலாளர் சந்தையில் ஏராளமான இளைஞர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் பல்வேறு தொழில்களை மந்தமடைய செய்துள்ளதாகவும், பெரும்பாலான தொழில்கள் முடங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஊழியர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிராந்தியத்தில் கிட்டத்தட்ட 22 கோடி இளம் தொழிலாளர்கள் குறுகிய காலத்திலேயே தங்களது வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர். 

கரோனா முடக்கத்தால் தொழில்துறையில் அனுபவம் வாய்ந்தவர்களை விட இளைஞர்கள் உடனடியாக நெருக்கடிக்கு உள்ளாகின்றனர்.

இளைஞர்களின் வேலைவாய்ப்பு நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்காகவும், 
ஊதிய மானியங்கள் மற்றும் பொது வேலைவாய்ப்பு திட்டங்கள் உள்ளிட்ட விரிவான தொழிலாளர் சந்தைக் கொள்கைகளை மையமாகக் கொண்ட இலக்குகளை பின்பற்ற வேண்டும் என அரசுக்கு ஆய்வு முடிவுகள் வலியுறுத்துகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT