நியூ ஜெர்ஸி உச்ச நீதிமன்றத்துக்கு முதல் கறுப்பின பெண் நீதிபதி நியமனம்
நியூ ஜெர்ஸியின் உச்ச நீதிமன்றத்தில் முதல் கறுப்பின பெண் நீதிபதியின் நியமனத்தை மாகாண செனட் அவை உறுதி செய்துள்ளது.
நியூ ஜெர்ஸியின் உச்ச நீதிமன்றத்தில் முதல் கறுப்பின பெண் நீதிபதியின் நியமனத்தை மாகாண செனட் அவை உறுதி செய்துள்ளது.
ஃபேபியானா பியர்ரே-லூயிஸ் (39) என்ற வழக்குரைஞர், ஃபெடரல் வழக்குரைஞராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவரை நியூ ஜெர்ஸியின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக டெமாக்ரடிக் ஆளுநர் பில் முர்பி கடந்த ஜூன் மாதம் பரிந்துரை செய்திருந்தார்.
லூயிஸ்தான் உச்ச நீதிமன்றத்துக்கு பில் முர்பியால் தேர்வான முதல் நபர் ஆவார்.
ஹைதியில் இருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்து வந்த குடும்பத்தைச் சேர்ந்த பியர்ரே-லூயிஸ்தான், சட்டக்கல்லூரிக்குச் சென்ற முதல் நபர் ஆவார்.
நியூ ஜெர்ஸி உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டது குறித்து தான் பெருமைப்படுவதாக கூறியிருக்கும் லூயிஸ், பல ஆண்டுகளுக்கு முன்பு, எனது பெற்றோர் ஹைதியில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். அப்போது, எங்கள் முதுகில் இருந்த பைகளில் துணிகளைத் தவிர வேறொன்றுமில்லை, அமெரிக்காவைப் பற்றிய கனவுகள் இதயத்தில் ஏராளமாக இருந்தது. தற்போது அவர்கள் என்னைப் பற்றி கண்ட கனவு நினைவாகியிருப்பதாகவே நான் கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.
பியர்ரே லூயிஸ் சுமார் 10 ஆண்டுகாலம் நியூ ஜெர்ஸியின் அமெரிக்க அரசு வழக்குரைஞராக பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.