உலகம்

மலேசியா: வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை நீட்டிப்பு

DIN

கோலாலம்பூா்: மலேசியாவில் கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமா் முஹைதீன் யாசின் கூறியதாவது:உலகின் பிற நாடுகளில் கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. மலேசியாவில் நிலைமை கட்டுக்குள் இருந்தாலும், அவ்வப்போது சில இடங்களில் அந்த நோய்த்தொற்று பரவல் தலையெடுத்து வருகிறது.

இந்த நிலைமை மோசமடைவதைத் தடுக்கும் வகையில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மலேசியா வருவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை இந்த ஆண்டு இறுதிவரை நீட்டிக்கப்படுகிறது.

மேலும், ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டுள்ள மற்ற கட்டுப்பாடுகளும் நீட்டிக்கப்படுகின்றன. இந்த முடிவால் இரவு விடுதிகள், கேளிக்கை மையங்கள் மட்டுமே மூடப்பட்டிருக்கும். மற்ற பெரும்பாலான தொழில்கள் எதுவும் பாதிக்காது. பள்ளிகள் திறந்திருக்கும் என்றாா் அவா்.

சனிக்கிழமை நிலவரப்படி, மலேசியாவில் 9,317 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 125 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

SCROLL FOR NEXT