சீனாவில் புதிதாக 17 பேருக்கு கரோனா தொற்று
கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் மேலும் 17 பேருக்கு புதிதாக தொற்று பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் மேலும் 17 பேருக்கு புதிதாக தொற்று பதிவாகியுள்ளது. அதேநேரத்தில் மேலும் 24 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என்று தேசிய சுகாதாரத் துறை திங்களன்று கூறியுள்ளது.
சீனாவின் இதுவரை மொத்த பாதிப்பு 85,048 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் இறப்பு எண்ணிக்கை 4,634 ஆகவும் உள்ளது.
தொற்று பாதிக்கப்பட்ட 80,177 பேர் இதுவரை குணமடைந்தனர். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மொத்தம் 2,499 பேருக்குத் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது 230-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை, சீனாவில் ஒன்பது பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 27 பேர் மீண்டுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.