உலகம்

ரஷியாவில் புதிதாக 4,993 பேருக்கு தொற்று; பாதிப்பு 9,95,319 ஆக உயர்வு

DIN

ரஷியாவில் புதிதாக 4,993 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 83 பேர் பலியாகியுள்ளனர். 

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் புதிதாக 4,993 பேருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 9,95,319 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 83 பேர் உள்பட இதுவரை 17,176 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேநேரத்தில் தற்போது வரை 8,09,387 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 2,405 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். 

தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 685 பேருக்கும், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 188 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. 

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவைத் தொடர்ந்து ரஷியா 4 ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை: கவிதாவின் காவல் மே 14 வரை நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

அரவிந்த் கேஜரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

SCROLL FOR NEXT