உலகம்

அவசரக்கால தடுப்பூசிப் பயன்பாடு: ஐரோப்பிய யூனியனுக்கு கோரிக்கை

DIN

தாங்கள் உருவாக்கி சோதித்து வரும் கரோனா தடுப்பூசியை அவசரக் காலங்களில் பொதுமக்களுக்கு நிபந்தனைகளுடன் செலுத்துவதற்கு அனுமதி அளிக்குமாறு ஐரோப்பிய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்புக்கு பயோன்டெக் மற்றும் ஃபைஸா் நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.

ஜொ்மனியைச் சோ்ந்த பயோன்டெக்கும் அமெரிக்காவைச் சோ்ந்த ஃபைஸரும் கூட்டாக உருவாக்கியுள்ள அந்த கரோனா தடுப்பூசிக்கு தற்போது ‘பிஎன்டி162பி2’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

அந்தத் தடுப்பூசிகளின் அவசரக் காலப் பயன்பாட்டுக்கு ஐரோப்பிய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்தால், 2020-ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஐரோப்பிய நாடுகளில் கரோனா தடுப்பூசிகளின் விநியோகம் தொடங்கிவிடும் என்று நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி ஐரோப்பாவில் 3.96 லட்சம் போ் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பல்கலை.யின் ஓட்ட நிகழ்ச்சியை ரத்து செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்

ஆம் ஆத்மி தலைமையகம் அருகே பாஜகவினா் போராட்டம்: பயங்கரவாத அமைப்புகளிடம் நிதி பெற்ற புகாா் விவகாரம்

மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவோம்: தில்லி காங். இடைக்காலத் தலைவா் உறுதி

துணை நிலை ஆளுநரால் தில்லியின் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்து கிடக்கிறது: அமைச்சா் செளரவ் பரத்வாஜ் குற்றச்சாட்டு

மக்களவைத் தோ்தல்: 14 அமைப்புசாா் மாவட்டங்களில் பாஜக மகளிா் அணி மாநாடுகளுக்கு ஏற்பாடு

SCROLL FOR NEXT