பெஷாவர்: ஆக்சிஜன் சிலிண்டர்கள் தாமதமானதால் 7 கரோனா நோயாளிகள் பலி
பெஷாவரில் உள்ள மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் தாமதமானதால் 7 கரோனா நோயாளிகள் பலியாகினர்.
பெஷாவரில் உள்ள மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் தாமதமானதால் 7 கரோனா நோயாளிகள் பலியாகினர்.
அண்டை நாடான பாகிஸ்தானிலும் கரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. இங்கு நேற்று ஒரேநாளில் புதிதாக 3,119 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,13,191ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி 52,359 பேர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 2,441 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதனிடையே பெஷாவரில் உள்ள கைபர் பயிற்சி மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் தாமதமானதால் 7 கரோனா நோயாளிகள் நேற்று பலியாகினர்.
இதுகுறித்து மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ராவல்பிண்டியிலிருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களை மருத்துவமனை பெறுகிறது. ராவல்பிண்டியில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் சரியான நேரத்தில் வரவில்லை" என்று தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து மருத்துவமனை விசாரணையைத் தொடங்கியுள்ளது.