கரோனா: ரஷியாவில் 20 லட்சம் பேர் குணமடைந்தனர்
ரஷியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 25 லட்சம் பேரில் 20 லட்சம் பேர் குணமடைந்துள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
ரஷியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 25 லட்சம் பேரில் 20 லட்சம் பேர் குணமடைந்துள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
ரஷியாவில் கரோனா பாதிப்பு ஒருபக்கம் அதிகரித்து வந்தாலும் குணமடைந்தோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் புதிதாக 26,190 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 25,41,199 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் மாஸ்கோவில் 5,145 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
Advertisement
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 559 பேர் உள்பட இதுவரை 44,718 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை 20,07,792 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும், இன்றைய நிலவரப்படி 4,88,689 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரஷியாவில் நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் கரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். 500க்கும் அதிகமானோர் பலியாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.