2020ஆம் ஆண்டின் தலைசிறந்த மனிதர்கள் ஜோ பைடன், கமலா ஹாரிஸ்: டைம் இதழ் அறிவிப்பு 
உலகம்

2020ஆம் ஆண்டின் தலைசிறந்த மனிதர்கள் ஜோ பைடன், கமலா ஹாரிஸ்: டைம் இதழ் அறிவிப்பு

பிரபல டைம் இதழின் 2020ஆம் ஆண்டின் தலைசிறந்த மனிதர்களாக அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

DIN

பிரபல டைம் இதழின் 2020ஆம் ஆண்டின் தலைசிறந்த மனிதர்களாக அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

1927ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டிற்கும் தலைசிறந்த மனிதர்களின் பட்டியலை டைம் இதழ் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் கரோனா முன்களப்பணியாளர்கள், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி டைம் இதழின் 2020ஆம் ஆண்டுக்கான தலைசிறந்த மனிதர்களின் பட்டியலில் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் இடம்பெற்றுள்ளனர்.

அமெரிக்காவின் கதையை மாறுகிறது எனக் குறிப்பிடப்பட்டு இருவரும் டைம் இதழின் அட்டைப் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு ஸ்வீடனைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் தலைசிறந்த மனிதராகத் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக திண்டுக்கல் தெற்கு மாவட்டச் செயலர் கைது

சிரிக்கும் தும்பைப் பூ... கேப்ரியல்லா!

இது புதுசு! உணவு ஆர்டர் செய்யும் செயலிகளிலும் மோசடியா? எச்சரிக்கை!

தெலுங்கில் அறிமுகமாகும் சிம்பு?

விரைவில் 2,200 பேராசிரியர்கள் நியமனம்: அமைச்சர் கோவி. செழியன்

SCROLL FOR NEXT