முகப்பு
உலகம்

உலகளவில் 7 கோடியைத் தாண்டியது கரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 7 கோடியைத் தாண்டியுள்ளது. 

Updated On : 11 டிசம்பர், 2020 at 9:12 AM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:35 PM

உலகம் முழுவதும் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 7 கோடியைத் தாண்டியுள்ளது. 
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் உலக நாடுகளை தொடர்ந்து வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு வருடமாகியும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. 
கரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷியா மற்றும் பிரான்ஸ் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. 
எனவே, கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளில் உலக நாடுகள் தீவிரம்காட்டி உள்ளன. 
பிரிட்டனைத் தவிரி ஒருசில நாடுகளில் தடுப்பு மருந்துகள் இறுதிகட்ட சோதனையில் உள்ளன. இந்த நிலையில் உலகம் முழுவதும் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 7 கோடியைத் தாண்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 7,07,11,368 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
கரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4,91,39,558 பேர் குணமடைந்துள்ளனர். 
மேலும் கரோனாவுக்கு இதுவரை 15,88,247 பேர் பலியாகியுள்ளனர். கரோனா தொற்றுக்கு தற்போது வரை 1,99, 83,563 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.06 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.