பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு 4.32 லட்சமாக உயர்வு!
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 3,047 பேர் புதிதாக கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 432,327 ஆக அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 3,047 பேர் புதிதாக கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 4,32,327 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஒரேநாளில் 50 பேர் உள்பட மொத்த உயிரிழப்பு 8,653 ஆகவும் உயர்ந்துள்ளது.
அதேசமயத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இதுவரை 3,79,092 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 44,582 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 2,538 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
Advertisement
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 42,596 மாதிரிகள் உள்பட இதுவரை 59,48,742 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
மாகாணவாரியாக பாதிப்பு
சிந்து - 1,91,246, பஞ்சாப் - 1,25,897, கைபர்-பக்துன்க்வா- 51,172, இஸ்லாமாபாத் - 34,014, பலுசிஸ்தான்- 34,014, கில்கித்-பல்திஸ்தான்- 4,770 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்- 7,578 பேர்.