முகப்பு
உலகம்

மெக்சிகோவில் மீண்டும் பொது முடக்கம் அறிவிப்பு

மெக்சிகோவில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் சனிக்கிழமை முதல் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 19 டிசம்பர், 2020 at 12:25 PM
மெக்சிகோவில் மீண்டும் பொது முடக்கம் அறிவிப்பு
பகிர்:

மெக்சிகோவில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் சனிக்கிழமை முதல் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கரோனா பரவல் கட்டுப்படுத்தும் விதமாக மெக்சிகோவில் ஜனவரி 10-ம் தேதி வரை மீண்டும் பொதுமுடக்கம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே மருத்துவமனையில் 75 சதவீதம் நிரம்பியுள்ளது. இது கடந்த ஜூன் மாதத்திற்கு  ஒத்ததாகும். 

தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தலைநகரைச் சுற்றியுள்ள மாநிலத்தில் அத்தியாவசியமற்ற அனைத்து வணிகங்களும், மூடப்பட வேண்டும் என்று துணை சுகாதார அமைச்சர் ஹ்யூகோ லோபஸ்-கேடெல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Advertisement

அடுத்த மூன்று வாரங்களில் நோய்த்தொற்று பரவுதல், மருத்துவமனையில் சேருதல் மற்றும் பெரும்பாலான இறப்புகளைக் குறைக்க அசாதாரண நடவடிக்கைகள் தேவை என்று லோபஸ்-கேடெல் கூறினார்.

நாட்டின் தொற்றுநோயின் மையமான மெக்சிகோவில் இதுவரை 2,77,733 பாதிப்பும், 15,083 இறப்புகளும் பதிவாகியுள்ளது. 

சனிக்கிழமை நிலவரப்படி, நாடு முழுவதும் மொத்தம் 1,28,9,298 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தது 116,487 பேர் இந்த நோய் காரணமாக இறந்துள்ளனர்.

அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியாவுக்கு அடுத்தபடியாக மெக்சிகோவில் இறப்பு எண்ணிக்கையில் தற்போது உலகின் நான்காவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.