உலகம்

நைஜீரியாவில் பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்டதன் பின்னணி என்ன?

DIN

நைஜீரியாவில் 344 பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்டதன் பின்னணியில் தீவிரவாதக் குழுக்கள் இல்லை என்றும் கால்நடை மேய்ச்சல் தொடர்பான இனக்குழுக்களின் மோதலே காரணம் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

நைஜீரியாவின் காட்சினா மாகாணம், கங்காரா நகர நடுநிலைப் பள்ளியிலிருந்து கடந்த டிசம்பர் 11ஆம் தேதி 344 பள்ளி மாணவர்கள் கடத்திச் செல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் ஈடுபட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் மாணவர்கள் மீட்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்தின் பின்னணியில் தீவிரவாத நோக்கங்கள் இல்லை எனவும் கால்நடை திருட்டு, மேய்ச்சல் உரிமைகள் தொடர்பாக இனவாதக் குழுக்களுக்கு இடையேயான மோதலின் காரணமாக நடத்தப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

அரவிந்த் கெஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!

கட்டான கட்டழகு.. யார் இவர்?

SCROLL FOR NEXT