உலகம்

வாடிகனில் எளிமையாக நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: போப் பிரான்சிஸ் பங்கேற்பு

DIN

கரோனா அச்சுறுத்தல் காரணமாக வாடிகன் நகரில் போப் ஆண்டவர் கலந்து கொண்ட கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் எளிமையான முறையில் நடைபெற்றது. 

கரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் எளிமையான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. வாடிகன் நகரில் நடப்பாண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே தொடங்கியது. 

இந்நிலையில் ரோமன் கத்தோலிக்க சபையின் தலைவரான போர் பிரான்சிஸ் வாடிகன் நகரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.

புனித செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நள்ளிரவு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. கரோனா பெருந்தொற்று காரணமாக இந்த நிகழ்வில் வழக்கத்திற்கு மாறாக 100க்கும் குறைவானவர்களே கலந்து கொண்டனர். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் முகக் கவசங்கள் அணிந்தும், ஒருவருக்கொருவர் தனிமனித இடைவெளியைப் பின்பற்றியும் மக்கள் கலந்து கொண்டனர்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் சிறப்பு திருப்பலியின் போது போப் பிரான்சிச் குழந்தை இயேசுவிற்கு முத்தமிட்டார். தொடர்ந்து பிரார்த்தனைக் கூட்டத்தில் போப் ஏழைகளுக்கு உதவி செய்து இறைவனுக்கு அன்பைக் காட்டுவோம் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

செம்பூவே... ஐஸ்வர்யா ராஜேஷ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

SCROLL FOR NEXT