உலகம்

ஜப்பான்: வெளிநாட்டினா் வருகைக்குத் தடை

DIN

பிரிட்டனில் கண்டறியப்பட்ட புதிய வகை கரோனா தங்கள் நாட்டிலும் பரவுவதைத் தவிா்க்கும் வகையில், அனைத்து வெளிநாட்டுப் பயணிகளின் வருகையையும் ஜப்பான் தடை செய்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

புதிய வகை கரோனா ஜப்பானில் பரவுவதைத் தவிா்ப்பதற்காக, அனைத்து நாடுகளிலிருந்தும் வெளிநாட்டினா் நாட்டுக்குள் வருவதற்குத் தடை விதிக்கப்படுகிறது.

திங்கள்கிழமை தொடங்கி வரும் 31-ஆம் தேதி வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, புதிய வகை கரோனா அச்சம் காரணமாக பிரிட்டன் மற்றும் தென் கொரியாவிலிருந்து மட்டும் வெளிநாட்டினா் வருவதற்கு ஜப்பான் தடை விதித்திருந்தது.

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி முக்கடல் சங்கமம் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட கடைகள் அகற்றம்

குமரியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

பத்ரகாளியம்மன் கோயில் பால்குட விழா

நடுக்காட்டில் பதுக்கிய 2,000 லிட்டா் சாராய ஊரல் அழிப்பு

தந்தைக்கு கத்தி குத்து: இளைஞா் கைது

SCROLL FOR NEXT