பாகிஸ்தான்: 10 ஆயிரத்தைக் கடந்தது கரோனா பலி
பாகிஸ்தானில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 10 ஆயிரத்தைக் கடந்தது.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 10 ஆயிரத்தைக் கடந்தது.
இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனாவுக்கு 55 போ் பலியாகினா். அதையடுத்து, நாட்டில் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 10-ஐக் கடந்துள்ளது.
புதன்கிழமை நிலவரப்படி, ஒட்டுமொத்த கரோனா பலி 10,047-ஆக உள்ளது.
இதுமட்டுமின்றி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,155 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இத்துடன், நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4,77,240-ஆக உயா்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுவரை பாகிஸ்தானில் 4,30,113 கரோனா நோயாளிகள் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா். 37,080 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 2,219 பேரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.