ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் கரோனா தொற்று: கட்டுப்பாடுகள் தீவிரம்
ஆஸ்திரேலியாவில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தும் விதமாக முன்னெச்சரிக்கை கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தும் விதமாக முன்னெச்சரிக்கை கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவில் கடந்த சில தினங்களாக கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனைத் தொடர்ந்து தொற்று பாதிப்புகளைக் கட்டுப்படுத்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் கட்டுப்பாடு நடவடிக்கைகள மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் விக்டோரியா மாகாணத்தில் உள்ள உள் அரங்குகளில் கூடுவோருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 15 பேர் வரை மட்டுமே கூட அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் முகக்கவசங்களை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சிட்னி, நியூ செளத் வேல்ஸ் மாகாணத்தின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் இதுவரை 28 ஆயிரத்து 405 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.