உலகம்

தேவாலயம் மீதான தாக்குதலில் 10 பேர் பலி

IANS

மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவிலுள்ள தேவாலயத்தின் மீது ஆயுதமேந்தி வந்தவர்கள் தாக்குதலில் ஈடுபட்டு 10 பேரைக் கொன்றனர்.

ஞாயிற்றுக்கிழமை நடந்த மத விழாவில், சஹேல் பிராந்தியத்தின் யாகா மாகாணத்திலுள்ள தேவாலயத்தில் இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. தேவாலய போதகரை பணயக் கைதியாக இழுத்துச் சென்று பயங்கரவாதிகள் தப்பி ஓடிவிட்டதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

அந்நாட்டின் வடக்கு பகுதியில் நிலவி வந்த அவசரநிலை ஜனவரி 12-ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. ஆனால்  பயங்கரவாதத்தைத் எதிர்த்து, மேலும் ஒரு வருடம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 13 பிராந்தியங்களில் ஏழு இடங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 700 பேர் பயங்கரவாத அமைப்புகளால் கொல்லப்பட்டுள்ளனர். அமைதியின்மை காரணமாக 270,000 பேர் தங்கள் வீடுகளை கைவிட்டுவிட்டதாக ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT