ஈரானின் காசிம் சுலைமானி இறுதி ஊர்வலத்தில் கூட்ட நெரிசல்: 35 பேர் பலி
ஈரானில் அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த காசிம் சுலைமானி இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் பலியாகியுள்ளனர்.
ஈரானில் அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த காசிம் சுலைமானி இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் பலியாகியுள்ளனர்.
அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த ஈரான் ரகசியப் படைத் தலைவர் காசிம் சுலைமானியின் இறுதி ஊர்வலம் டெஹ்ரானில் நடைபெற்றது.
இந்த இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் பலியானதாவும், 48 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு தொலைக்காட்சி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
காசிம் சுலைமானின் சொந்த ஊரான கெர்மான் பகுதியில் இறுதி ஊர்வலம் வந்தபோது, கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.
காசிம் சுலைமானியின் இறுதி ஊர்வலம் முதல் முறையாகப் பல்வேறு நகரங்கள் வழியாக நடைபெற்றது.
ஈரானில் இஸ்லாமிய குடியரசை நிறுவிய அயதுல்லா கொமேனி, கடந்த 1989ம் ஆண்டு காலமானபோது கூட, அவருக்கு இத்தகைய இறுதி மரியாதை நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.