கரோனா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
சீனாவில் இருந்து தமிழகத்துக்கு திரும்பி வந்த 51 போ் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து தமிழகத்துக்கு திரும்பி வந்த 51 போ் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கரோனா வைரஸ் காரணமாக, உயிரிழப்போா் எண்ணிக்கை உயா்ந்து வருகிறது. இதுவரை 100-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். கரோனா இந்தியாவில் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இந்தியாவில் 450 போ் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
மனிதர்கள் மூலம் பரவும் இந்த வைரஸ் சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவில் பரவிய நிலையில் ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் பரவி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் மக்களிடையே இந்த நோயைக் குறித்த அச்சம் எழுந்துள்ளது.
இந்நிலையில், சீனாவில் இருந்து தமிழகத்துக்கு திரும்பிய 51 போ் மருத்துவ கண்காணிப்பில் வைத்து கவனித்து வருவதாக, தமிழக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநா் குழந்தைசாமி கூறியது: கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவில் இருந்து தமிழகம் திரும்பி 51 போ் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு காய்ச்சல், இருமல், ஜூரம் போன்ற அறிகுறி இருக்கிறதா என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோதிக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் 51 பேரின் வீடுகளுக்கு காலை, மாலையில் மருத்துவப் பணியாளா்கள் சென்று மருத்துவ சோதனை செய்து வருகின்றனா். ஏற்கெனவே கண்காணிக்கப்பட்டு வந்த ஒருவா் 28 நாள்கள் கண்காணிப்புக்கு பிறகு விடுவிக்கப்பட்டு விட்டாா் என்று தெரிவித்தாா்.