சீன மகளிர் சம்மேளனம் கரோனா நோய்த் தடுப்பு முன்னணியில் நின்று செயலாற்றிய 660 குடும்பங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அவர்களுள் ஊரின் கட்சிக்குழு செயலாளர்களாகப் பணிபுரியும் ஒரு தம்பதியரும் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் ஒருவர் ஹேநான் மாநிலத்தின் சேங்கொ எனும் ஊரின் முதன்மைச் செயலாளராகவும், மற்றவர் ச்சின்கங் ஊரின் முதன்மைச் செயலாளராகவும் பணியாற்றி வருகின்றார்.
இத்தம்பதியர் இருவரும் தாங்கள் பணிபுரிந்து வரும் ஊர்களில் நோய் தடுப்புப் பணியைத் தங்குதடையின்றி சிறப்பாக மேற்கொண்டதன் காரணமாக அவ்வூர்களில் கொவைட்-19 நோய்த் தொற்றே இல்லாத சூழலை உருவாக்கிச் சாதனை படைத்துள்ளனர்.
தற்போது, ஊர்வாசிகளின் வருமானத்தை விரைவாக அதிகரிக்கும் வகையில், வறுமை ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வரும் அவர்கள், தொழில் நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு, அவற்றின் மீட்சிக்கு உதவி செய்து, வறிய மக்கள் சொந்த ஊரிலேயே வேலை செய்வதற்கு உதவியளித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.