உலகம்

ரஷியாவில் மேலும் 6,368 பேருக்கு கரோனா; பாதிப்பு 7 லட்சத்தை நெருங்குகிறது!

DIN

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,368 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 6,94,230 ஆக அதிகரித்துள்ளது. 

உலக அளவில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷியா 4 ஆம் இடத்தில் உள்ளது. முன்னதாக அமெரிக்காவைத் தொடர்ந்து பிரேசில், இந்தியா முதல் மூன்று இடங்களில் உள்ளன. 

இந்நிலையில், ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் குறித்த விவரங்களை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி,  ஒரேநாளில் 6,368 பேருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து, அந்நாட்டில் மொத்த பாதிப்பு 6,94,230 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதித்தோரில் 1,902 பேருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 198 பேர் பலியாகியுள்ளதை அடுத்து மொத்த உயிரிழப்பு 10,494 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் தற்போது வரை 4,63,880 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு: தமிழக அரசு விளக்கம்

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

சந்தேஷ்காளி வழக்கு: சிபிஐ விசாரணை திருப்தி அளிக்கிறது - கொல்கத்தா உயா்நீதிமன்றம்

தென்மாவட்டங்களில் கல்குவாரிகளை மூட வேண்டும் -டாக்டா் க.கிருஷ்ணசாமி

திட்டப் பயனாளிகள் குறித்த கணக்கெடுப்பு: அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT