அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 62 ஆயிரம் பேருக்குத் தொற்று
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 62 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 62 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நாள் ஒன்றுக்கு பல்லாயிரக்கணக்கில் இங்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் கரோனா பாதிப்பு குறித்த தகவல்களை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைகழகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, புதிதாக 62,000 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால், அமெரிக்காவில் மொத்த பாதிப்பு 3.54 லட்சமாக உயர்ந்துள்ளது.
இதுவரை அந்த நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 1,39,145 ஆக உயர்ந்துள்ளது. 16,00,321 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர்.