உலகம்

தான்சானியா நாட்டின் முன்னாள் அதிபர் மறைவு

DIN

தான்சானியா நாட்டின் முன்னாள் அதிபர் பெஞ்சமின் எம்.காபா (81) உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

1995 முதல் 2005 வரை தான்சானியா நாட்டின் அதிபராக பதவி வகித்தவர் பெஞ்சமின் எம்.காபா.

கிழக்கு ஆப்பிரிக்காவில் பல பிராந்திய சமாதான முயற்சிகளுக்கு தலைமை தாங்கிய எம்.காபா, உடல்நலக்குறைவால் டார் எஸ் சலாமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். 

"தேசத்தின் மீதான அவரது மிகுந்த அன்பு, அவரது பக்தி, கடின உழைப்பு மற்றும் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் நான் அவரை நினைவில் கொள்வேன்" என்று தான்சானியா அதிபர் மாக்ஃபுலி கூறினார்.

எம்.காபாவின் மறைவிற்கு நாட்டில் ஏழு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், அனைத்து கொடிகளும் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் அரசு தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT