அனைவருக்கான தடுப்பூசி தயாரிப்பில் ஒத்துழைப்பு தேவை
கொவைட்-19 நோய் தடுப்பூசி ஆய்வு மற்றும் மருத்துவச் சோதனை பற்றிய நல்ல செய்திகள் அடிக்கடி வெளி வந்த வண்ணம்..
கொவைட்-19 நோய் தடுப்பூசி ஆய்வு மற்றும் மருத்துவச் சோதனை பற்றிய நல்ல செய்திகள் அடிக்கடி வெளி வந்த வண்ணம் உள்ளன. சீனா, பிரிட்டன், ரஷியா போன்ற நாடுகளின் தடுப்பூசி ஆய்வு மற்றும் சோதனையில் நல்ல முடிவுகள் காணப்பட்டுள்ளன.
தடுப்பூசி ஆய்வு மற்றும் சோதனைப் பணிகள் வெற்றி பெற்றால், மனிதகுலத்துக்கும், குறிப்பாக இவ்வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா, பிரேசில், இந்தியா போன்ற நாடுகளின் மக்களுக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியாக இருக்கும்.
பிரிட்டனில் தலைமையகத்தை அமைத்துள்ள ஆஸ்ட்ராசெனிகா நிறுவனம் இந்தியாவுடன் உருவாக்கிய ஒப்பந்ததம் ஒன்றின்படி, இவ்விரு தரப்புகளின் ஒத்துழைப்பு மூலம் 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் நடுத்தர மற்றும் குறைந்த வருமானமுடைய நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட உள்ளன.
பயன்தரும் பாதுகாப்பான தடுப்பூசி வெற்றிகரமாக கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, போதிய அளவிலான வினியோகம் மிகவும் முக்கியமானது. அதற்கு முழு உலகின் உற்பத்தித் திறன் தேவை. ஆனால் தற்போது குறிப்பிட்ட சிலர் வேண்டுமென்றே இதற்குத் தடை செய்து வருகின்றனர். மருந்துப் பொருட்களின் கண்டுபிடிப்புக்கான அறிவுசார் காப்புரிமை தற்போது தாறுமாறாகப் பயன்படுத்தக் கூடாது. ஏகபோகத்தின் உருவாக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.
மனிதகுலத்தின் பொது நலனுக்காக அனைத்து நாடுகளும் ஒத்துழைத்து, வைரஸுக்கு எதிரான அறிவுகள், தொழில் நுட்பம், மருத்துவச் சிகிச்சைத் திட்டங்கள் முதலியவற்றை பொது வளங்களாகப் பகிர்ந்து கொண்டு அனைவரும் பயன்படுத்த வேண்டும். மனிதகுலத்தின் பொது எதிர்காலத்தை உருவாக்குவதில் ஈடுபட்டு மற்ற நாடுகளுடன் ஒத்துழைக்க விரும்பும் சீனா, கொவைட்-19 நோய் தடுப்பூசி ஆய்வு வெற்றி பெற்றால், அதனைப் பொது நலப் பொருளாகப் பயன்படுத்தும் என்று தெரிவித்துள்ளது நினைவுகூரத்தக்கது. ஒத்துழைப்பு மற்றும் பகிர்வை விரும்பும் நாடுகள் மற்றும் நிறுவனங்களை முன்மாதிரியாகக் கொண்டு இதர தரப்புகள் செயல்பட வேண்டும். அப்போதுதான் மனிதகுலம் ஒளிவீசும் எதிர்காலத்தை வரவேற்க முடியும்.
தகவல்:சீன ஊடகக் குழுமம்