உலகம்

வூஹான் வைரஸ் ஆய்வகத்தின் ஆய்வாளர் சயின்ஸ் இதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டி

DIN

ஜூலை 24ஆம் நாள், உலகளவில் புகழ்பெற்ற “சயின்ஸ்” எனும் இதழ் வூஹான் வைரஸ் ஆய்வகத்தின் ஆய்வாளர் ஷி சேங்லி என்பவரின் சிறப்புப் பேட்டியை வெளியிட்டது.

அப்பேட்டியில் ஷி சேங்லி, புதிய கரோனா வைரஸ் வூஹான் ஆய்வகத்திலிருந்து ரகசியமாக வெளியேறியது என்று டிரம்ப் கூறியுள்ளதை உண்மைக்குப் புறம்பானது எனக்கூறி மறுத்துள்ளார். அதோடு, தவறான கருத்தை வெளியிட்டமைக்காக டிரம்ப் எங்களிடம் மன்னிப்பு கேட்க கடமைப்பட்டிருக்கின்றார் என்றும்  அவர் கூறினார்.

தங்களின் வைரஸ் ஆய்வகம் எப்போதுமே புதிய கரோனா வைரசினை ஆராயவில்லை என்றும், இந்த வைரஸின் இருப்பு பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

வூஹான் வைரஸ் ஆய்வகத்தில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களும் மாணவர்களும் தங்களை உடல் பரிசோதனைக்கு உடபடுத்திக் கொண்டனர் என்றும் யாருக்கும் எவ்விதத் தொற்றும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT