உலகம்

கடந்த 24 மணி நேரத்தில் ஜெர்மனியில் 333 பேர்; துருக்கியில் 839 பேருக்கு தொற்று

DIN

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 333 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. கரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஜெர்மனி 9 ஆம் இடத்தில் உள்ளது. 

இந்நிலையில் ஜெர்மனியில் இன்று மேலும் 333 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,81,815 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 11 பேர் உயிரிழந்ததை அடுத்து மொத்மாக 8,511 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அந்நாட்டில் சுமார் 1.65 லட்சம் பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

அந்நாட்டின் தொற்று நோய்கள் குறித்த தரவுகளை அளிக்கும் ராபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் (ஆர்.கே.ஐ) மேற்குறிப்பிட்ட விவரங்களை வெளியிட்டுள்ளது. 

துருக்கி 

உலகில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் துருக்கி 11 ஆம் இடத்தில் உள்ளது. 

துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் 839 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,63,942 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மேலும் 25 பேர் உயிரிழந்ததை அடுத்து, இதுவரை 4,540 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 1,27,973 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT