உலகம்

ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்க அரசியல்வாதிகளின் தலையீடு அமெரிக்காவுக்கு தான் பாதகம்

ஆப்பிரிக்க வம்சாவழி அமெரிக்கர் ஒருவர் வெள்ளை இனக் காவற்துறையைச் சேர்ந்த ஒருவரின் வன்முறையில் கொல்லப்பட்ட சம்பவம்

DIN

ஆப்பிரிக்க வம்சாவழி அமெரிக்கர் ஒருவர் வெள்ளை இனக் காவற்துறையைச் சேர்ந்த ஒருவரின் வன்முறையில் கொல்லப்பட்ட சம்பவம் காரணமாக, அமெரிக்காவின் 70க்கும் அதிகமான நகரங்களில் பெருமளவிலான ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்து வருகின்றன. சில ஆர்ப்பாட்டங்களில் வன்முறை தாக்குதல்கள் ஏற்பட்டுள்ளன. இத்தகைய நிலைமை கடந்த ஆண்டில் ஹாங்காங்கில் காணப்பட்டது.

ஆனால், ஹாங்காங்கில் நிகழ்ந்த வன்முறையைத் தூண்டி விட்டு அதனை அருமையான காட்சி எனக் கருதிய அமெரிக்க அரசியல்வாதிகள், தற்போது, இனப் பாகுபாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அமெரிக்க பொது மக்களை வன்முறையாளர்களாகக் கருதுகின்றனர். அவர்களை இராணுவம் கொண்டு அடக்குவோம் என்று அச்சுறுத்தியும் உள்ளனர்.

அமெரிக்க அரசியல்வாதிகளின் இரட்டை வரையறை சார் செயல்களின் மூலம், பொது மக்களின் உயிரைப் பொருப்படுத்தாமல் வாக்குகள் மற்றும் சுயநலனின் மீது மட்டுமே அக்கறை கொள்ளும் அவர்களின் மனநிலை தெளிவாக வெளிப்பட்டுள்ளது.

ஹாங்காங் ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின்படி, 1995 முதல் 2015 தொடக்கம் வரை, அமெரிக்க தேசிய ஐனநாயக நிதியம் ஹாங்காங்கின் எதிர்ப்பிரிவினருக்கு மொத்தம் 39 லட்சத்து 50 ஆயிரம் டாலருக்கு மேலாக நிதி வழங்கியுள்ளது. இந்நிதியம் சீனா மற்றும் ஹாங்காங்கில் தலையிடும் சக்தியுடன் இணைந்து வண்ணப் புரட்சியை நடத்த முயன்றது. மேலும், அமெரிக்க அரசியல்வாதிகள் ஹாங்காங்கைச் சீர்குலைப்பதன் மூலம் சீனாவின் வளர்ச்சியைத் தடுக்க முயன்று வருகிறது.

மற்றவருக்கு தீங்குவிளைவிக்கும் ஒருவர் தனக்கும் பாதிப்பை ஏற்படுத்துவார். ஹாங்காங்கில் 85 ஆயிரம் அமெரிக்கர்கள் உள்ளனர். மேலும் அமெரிக்காவைச் சேர்ந்த 1300 நிறுவனங்கள், 300 பிராந்திய தலைமையகங்கள், 400 பிரதேச அலுவலகங்கள் ஹாங்காங்கில் உள்ளன. ஹாங்காங் மீது தடை நடவடிக்கை மேற்கொண்டால், அங்குள்ள அமெரிக்க நிறுவனங்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்க முடியுமா என்பது பெரிய பிரச்னை.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பூரில் பலத்த மழை

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

SCROLL FOR NEXT