உலகம்

பாகிஸ்தானில் ஒரேநாளில் 3,938 பேருக்கு தொற்று; மேலும் 78 பேர் பலி

DIN

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,938 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 76,398 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டின் தேசிய சுகாதார அமைப்பு இன்று வெளியிட்டுள்ள தகவலில் கூறியுள்ளதாவது:

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,938 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 76,398 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 78 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து மொத்த உயிரிழப்பு 1,621 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று இதுவரை 27,110 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

நேற்று மட்டும் 16,548 பரிசோதனைகள் உள்பட இதுவரை 5,77,974 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மொத்த பாதிப்பில் பஞ்சாபில் 27,850, சிந்து - 29,647, கைபர்-பக்துன்க்வா- 10,485, பலுசிஸ்தான்- 4,514, இஸ்லாமாபாத் - 2,893, கில்கித்-பல்திஸ்தான்- 738 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 271 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 77,848 பக்தா்கள் தரிசனம்

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

கோடை விடுமுறை: விமான சேவைகள் அதிகரிப்பு

உதகை, கொடைக்கானல்: வாகனங்கள் இன்றுமுதல் இ-பாஸ் பெறலாம்

மின் வாரிய ஆள்குறைப்பு ஆணைகளை ரத்து செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT