உலகம்

மேலை நாடுகளின் உண்மையான அச்சுறுத்தல் பாம்பியோ

DIN

அமெரிக்காவில் குழப்பம் உள்ள போதிலும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாம்பியோ தொடர்ந்து பொய்களைக் கூறி வருகிறார். அண்மையில், ஃபாக்ஸ் நீயூஸுக்கு அவர் அளித்த போட்டியில், அமெரிக்கா மற்றும் மேலை கூட்டணி நாடுகளின் நலனை சீனா சீர்குலைத்து, அச்சுறுத்துகின்றது. ஐரோப்பா மற்றும் அமெரிக்கா கூட்டாக சீனாவை தடுக்க வேண்டும் என்றார்.

ஆனால், புதிய ரக கரோனா வைரஸ் பரவலில், பாம்பியோவின் கீழ்தரமான பண்புகளை ஐரோப்பிய மக்கள் தெரிந்துகொண்டனர். பலதரப்புவாதத்தைச் செயல்படுத்தி வருகின்ற மக்களை அவர் ஏமாற்ற முடியாது.

புதிய புள்ளி விவரங்களின் படி, தொற்று நோய் பரவலின் போது, 73 விழுக்காட்டு ஜெர்மனி மக்களிடையே அமெரிக்காவின் மீதான வரவேற்பு குறைந்துள்ளது. இத்தாலியில் அமெரிக்காவுக்கான ஆதரவு விகிதம் 17 விழுக்காடாகக் குறைந்துள்ளது என்று அமெரிக்காவின் பிஸ்வுஸ் இன்சைடர் செய்தி வெளியிட்டுள்ளது. கூட்டணி நாடுகளை அமெரிக்கா காட்டிக்கொடுப்பதனால் வரும் தவிர்க்க முடியாத விளைவு இதுவாகும்.

கடந்த சில ஆண்டுகளில், பொருளாதார மற்றும் வர்த்தகம், எரியாற்றல், அறிவியல் தொழில் நுட்பம் ஆகிய துறைகளில் ஐரோப்பாவுக்கு பல தொல்லைகளை அமெரிக்கா கொடுத்துள்ளது. அமெரிக்க அரசியல்வாதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாம்பியோ முதல் இடத்தைப் பிடிப்பதற்காக ஐரோப்பாவை அமெரிக்கா பயன்படுத்தி வருகின்றார். இந்த நிலைமையில், அட்லாண்டிக்கடல் கடந்த கூட்டணி அழிந்து வருகின்றது.

அண்மையில், பிரிட்டன், ஜெர்மனி, டென்மார்க் ஆகிய நாடுகளிலுள்ள அமெரிக்க தூதரகங்கள் மக்களால், சுற்றிவளைக்கப்பட்டன. இது, அமெரிக்காவில் இனபாகுபாட்டுக்கு எதிரான போராட்டத்துக்கு ஐரோப்பிய மக்கள் ஆதரவு அளிப்பதைக் காட்டுகிறது. மேலை நாடுகள் உள்ளிட்ட உலக நாடுகளின் மக்களுக்கு உண்மையான அச்சுறுதலாக இருப்பவர் பாம்பியோ என்று ஐரோப்பிய மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வதற்கான இ-பாஸ் முறையை நீக்க நடவடிக்கை தேவை: ஜவாஹிருல்லா

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தருமபுரியை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

உணவகத்தில் எரிவாயு கசிவால் தீ விபத்து

தீத்தடுப்பு ஒத்திகைப் பயிற்சி

SCROLL FOR NEXT