முகப்பு
உலகம்

ஜார்ஜியாவில் விமான விபத்து: 2 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி

ஜார்ஜியாவில் வெள்ளிக்கிழமை சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது, இண்டியானாவுக்கு இறுதிச் சடங்கிற்குச் சென்று கொண்டிருந்த அமெரிக்காவின்

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:45 PM
பகிர்:


ஜார்ஜியாவில் வெள்ளிக்கிழமை சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது, இண்டியானாவுக்கு இறுதிச் சடங்கிற்குச் சென்று கொண்டிருந்த அமெரிக்காவின் புளோரிடாவின்  வில்லிஸ்டனைச் சேர்ந்த  ஒரே குடும்பத்தினர், உறவினரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக இண்டியானாவுக்கு வெள்ளிக்கிழமை மாலை சிறிய ரக விமானத்தில் சென்றனர். அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் மற்றும் பைலட் என மொத்தம் 5  பேர் பயணித்தனர்.  

விமானம் அட்லாண்டாவின் தென்கிழக்கில் சுமார் 100 மைல் (161 கிலோமீட்டர்) தொலைவில் ஜார்ஜியா வான்பகுதியில்  சென்றபோது, திடீரென தீப்பற்றி எரிந்து தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 5 பேரும் பலியாகினர்.

புத்னம் கவுண்டி மில்லட்வில்லே பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளது. சிதறிய விமான பாகங்கள் அருகில் உள்ள வயல்வெளியில் கிடந்தன.

Advertisement

அந்த விமானம் வானில் சிறிது நேரம் வட்டமிட்டதாகவும் பின்னர் தீப்பிடித்து விழுந்ததாகவும் விபத்தை நேரில் பார்த்த கிராமவாசி ஒருவர் தெரிவித்தார்.

பலியானவர்கள் புளோரிடாவின் மோரிஸ்டனைச் சேர்ந்த லாரி ரே ப்ரூட் (67), புளோரிடாவின் கெய்னெஸ்வில்லியைச் சேர்ந்த ஷான் சார்லஸ் லாமண்ட்(41), அவரது மனைவி ஜோடி ரே லாமண்ட்(43) மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைகள் ஜெய்ஸ்(6) மற்றும் ஆலிஸ்(4).

 விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments