காவல்துறையின்அடக்குமுறையைத் தடை செய்யும் வகையில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனெட் அவை மற்றும் பிரதிநிதிகள் அவையின் ஜனநாயகக் கட்சிப் பிரதிநிதிகள் 8ஆம் நாள் வரைவு சட்டம் ஒன்றை முன் வைத்துள்ளனர்.
அதில் அமெரிக்காவின் குற்றவியல் நீதி அமைப்பில் இனவெறி நிலைமையைக் குறைக்க வேண்டும் என்றும், குறிப்பாக ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மற்றும் பிற இனச் சிறுபான்மையினரின் மீதான அதிகப்படியாக வன்முறையைப் பயன்படுத்தும் செயலைப் பன்முகங்களிலும் தடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
2 வாரங்களுக்கு முன்பாக, காவற்துறையினர்களின் வன்முறை செயலால், ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் ஃபிளாய்ட் உயிரிழந்தார். இச்சம்பவத்துக்குப் பிறகு ஆர்ப்பாட்ட நடவடிக்கை அமெரிக்காவில் வேகமாகப் பரவி வருகின்றது. இந்தச் சூழலில் இப்படியொரு சட்டவரைவு முன்வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றப் பிரதிநிதிகள் அவை, அடுத்த சில வாரங்களில் இந்த வரைவு பற்றிய வாக்கெடுப்பை மேற்கொள்ளும் என்று அந்த அவையின் தலைவர் பெலோசி செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
இந்நிலையில் அன்று அமெரிக்கக் குடியரசுக் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனநாயகக் கட்சி முன்வைத்த இவ்வரைவின் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தகவல்:சீன ஊடகக் குழுமம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.