உலகம்

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 1,239 பேர் கரோனாவுக்கு பலி

DIN

பிரேசில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பால் 1,239 பேர் பலியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்காவைத் தொடர்ந்து பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. 

கடந்த சில நாள்களாக பிரேசிலில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு உயிரிழப்பு ஆயிரத்தைத் தாண்டிய நிலையில் உள்ளது. 

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,239 பேர் பலியானதையடுத்து மொத்த உயிரிழப்பு 40,919 ஆக உயர்ந்துள்ளது.

அந்த நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,08,828-ஐ எட்டியுள்ளது. இதுவரை சுமார் 3,96,692 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 

அமெரிக்காவை விட பிரேசில் ஒருநாள் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

SCROLL FOR NEXT