ரஷியாவில் புதிதாக 8,987 பேருக்கு தொற்று; மொத்த பாதிப்பு 5,11,423 ஆக அதிகரிப்பு!
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,987 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 5,11,423 ஆக அதிகரித்துள்ளது.
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,987 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 5,11,423 ஆக அதிகரித்துள்ளது.
உலக அளவில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா மற்றும் பிரேசிலைத் தொடர்ந்து, ரஷியா 3 ஆம் இடத்தில் உள்ளது. இங்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக 10 ஆயிரம் பேர் வரையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,987 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் மொத்த பாதிப்பு 5,11,423 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 183 பேர் பலியாகியுள்ளனர். இதனால் ரஷியாவில் இதுவரை கரோனாவுக்கு 6,715 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 8,220 உள்பட இதுவரை 2,69,370 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.
Related Article
சிங்கப்பூரில் புதிதாக 463 பேருக்கு கரோனா; பாதிப்பு 40 ஆயிரத்தை நெருங்குகிறது!
பாகிஸ்தானில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 6,397 பேருக்கு தொற்று உறுதி
ஜெர்மனியில் மேலும் 258 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 1,239 பேர் கரோனாவுக்கு பலி
கரோனா: உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 76 லட்சத்தை நெருங்குகிறது