சிங்கப்பூரில் புதிதாக 407 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:
சிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் 407 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 4 பேர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் அனைவரும் வெளிநாட்டினர். சமூகப் பரவலால் 9 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலமாக நாட்டில் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40,604 ஆக அதிகரித்துள்ளது.
பலியானோரின் எண்ணிக்கை 26 ஆக உள்ளது. இதுவரை 28,808 பேர் குணமடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.