உலகம்

அமெரிக்க வர்த்தகத்தில் சீனாவின் முக்கிய இடம்

DIN

புதிய ரக கரோனா வைரஸ் பரவலால், உலக வர்த்தகம் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இப்பின்னணியில், அமெரிக்க விவசாயிகளையும் ஏற்றுமதி வர்த்தகர்களையும் பொருத்தவரை, சீனா முக்கிய ஒத்துழைப்பு கூட்டாளியாக மாறியுள்ளது என்று அமெரிக்க செய்தி ஊடகங்கள் கூறியுள்ளன. 

இவ்வாண்டு ஏப்ரல் திங்கள், சீன-அமெரிக்க இரு தரப்பு வர்த்தகத் தொகை 3970 கோடி அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. இது இவ்வாண்டின் மார்ச் திங்களில் இருந்ததை விட 43 சதவீதம் அதிகமாகும். அதனையடுத்து, சீனா, அமெரிக்காவின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியாக மீண்டும் மாறியுள்ளது என்று அமெரிக்காவின் தி வால்ஸ்ட்ரீட் நாளேட்டின் இணையம் 14ஆம் நாள் கூறியுள்ளது.

உலக வங்கியின் புதிய மதிப்பீட்டின் படி, இவ்வாண்டில் உலகின் முக்கிய பொருளாதாரச் சமூகங்களில் சீனா மட்டுமே பொருளாதார அதிகரிப்பை நனவாக்கும் என்றும் முன்னெப்போதையும் விட, சீனா முக்கிய வாங்கும் சக்தியாக மாற்றியுள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காளிங்க நாா்த்தன கிருஷ்ணன் கோயில் குடமுழுக்கு

சுதந்திரப் போராட்டத் தியாகிகளை ஜாதிய தலைவா்களாக சித்தரிக்கக் கூடாது: ஆளுநா் ஆா்.என்.ரவி

கூண்டுப் புழுக்களிடமிருந்து பயிா்களை காக்கும் வழிமுறைகள் அறிவிப்பு

யுபிஎஸ்சி தோ்வு: வேலூா் மாவட்டத்தில் 1,268 போ் எழுதினா்- 954 போ் தோ்வுக்கு வரவில்லை

நாளைய மின் தடை

SCROLL FOR NEXT